உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலைகளில் திரியும் கால்நடைகள் எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி புகார்

சாலைகளில் திரியும் கால்நடைகள் எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி புகார்

புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;வெங்கடேசன் (பா.ஜ): நகரில் பல பகுதிகளில் சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.எதிர்கட்சி தலைவர் சிவா: சனி, ஞாயிறுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளை விட கால்நடைகள் சாலையில் ஜாலியாக திரிகின்றன. சிறுவர்களை தாக்குகின்றன. விபத்தில் சிக்கியும் இறக்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.முதல்வர் ரங்கசாமி: நகர பகுதியில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலையில் திரியும் மாடுகள் வாரந்தோறும் நகராட்சியால் பிடிக்கப்படுகிறன. அதன் பிறகு அபராதம் விதித்து, உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.வெங்கடேசன்: கால்நடைகள் ரோடுகளில் திரிவதால் நகர பகுதியில் மாடு வளர்ப்போர்களுக்கு தனி இடம் கண்டறிந்து தரப்படுமா?எதிர்க்கட்சி தலைவர் சிவா: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் உள்ளது. உதாரணமாக டில்லி புற நகரில் 200 ஏக்கர் எடுத்து நகர பகுதியில் மாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அங்கு கால்நடை மருத்துவமனை கட்டி, இதர திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.சென்னையில் கால்நடை துறை மூலம் திருவெற்றியூரில் இது மாதிரி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கே.வி.கே., உள்பட இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரந்தரமாக கொடுக்கபோவதில்லை. கால்நடை வளர்ப்பிற்காக ெஷட் கட்டி கொடுக்கலாம். இங்கு நகர பகுதியில் உள்ள அனைத்து மாடுகளையும் கொண்டு வந்துவிடலாம்.இதன் மூலம் கால்நடை உரிமையாளர்களுக்கு மேய்ச்சலுக்கான இட பிரச்னையும் தீரும். நகர பகுதியில் கால்நடை ரோட்டில் திரிவது தடுக்கப்படும். கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பும் பாதுகாக்கப்படும்.முதல்வர் ரங்கசாமி: இது சம்பந்தமாக டில்லி, சென்னைக்கு அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்து, செயல்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை