உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன் கிறிஸ்துமஸ் குடில்

மொபைல் போன் கிறிஸ்துமஸ் குடில்

அரியாங்குப்பம்: இணைத தள மூலம் குற்றங்கள் நடந்து வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மொபைல் போன் மாதிரி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, பல்வேறு வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கொண்டாடி வருகின்றனர். அரியாங்குப்பம் உப்புகார வீதியில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வீட்டில், இணைய தளங்கள் மூலம் சைபர் குற்றங்கள் நடந்து வருவதை தடுக்கும் வகையில், மொபைல் போன், மாதிரியில் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.குடில் அமைத்த ஆசிரியர் சுந்தராசு கூறுகையில், 'அரியாங்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறேன். கிறிஸ்துமஸ் விழாவின் போது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடில் அமைத்து வருகிறேன். பேஸ்புக், இன்ஸ்ட்ரா கிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல இணைய தளங்கள் மூலம், குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மொபைல் மாதிரி கிறிஸ்துமஸ் குடில் வடிவமைத்துள்ளேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை