உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரம்ப சுகாதார நிலையத்தில் மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,ஆய்வு

பாகூர்: மூதாட்டி உயிரிந்த சம்பவம் தொடர்பாக, கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மோகன்தாஸ் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்போஜன் சிங், அவரது மனைவி விதாபிதேவி, 65. இருவரும், கிருமாம்பாக்கத்தில் வசித்து வந்தனர். விதாபிதேவி நேற்று (நவ.,16) மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பணியில் இல்லாத நிலையில், செவிலியர் அவரை பரிசோதனை செய்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அல்லது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். உடனே, தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மூதாட்டியை, பொது மக்கள் அழைத்துச் சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததே, மூதாட்டியின் உயிரிழப்புக்கு காரணம் என மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., இன்று (நவ.,17) கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, மருத்துவ அதிகாரியிடம், மூதாட்டி உயிரிழப்பு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின், மருத்துவமனையில், 24 மணி நேரமும் டாக்டர்கள், ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் பரிசோதனை வசதியை ஏற்படுத்தி தர சுகாதார இயக்குனர் மற்றும் செயலரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ