உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பணம் பட்டுவாடா : இருவர் கைது

 பணம் பட்டுவாடா : இருவர் கைது

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் குடியிருப்புப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க அதிநவீன டிரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், லாஸ்பேட்டை தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். ​அப்போது, சாமிப்பிள்ளை தோட்டம் ப குதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களைச் சோதனை செய்தனர். அவர்களிடம் வாக்காளர் பட்டியலுடன், ரூ. 20,000 ரொக்கம் இருந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை