நீட் அல்லாத படிப்புகளுக்கு மாப் அப் 2 கவுன்சிலிங்
புதுச்சேரி: சென்டாக் நீட் அல்லாத தொழிற்கல்வி, கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாப் அப்–2 இணையவழி சுற்றிற்கான பாடப்பிரிவு விருப்பங்களை சமர்பிக்க இன்று 19 ம்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலநீட்டிப்பு, பி.எஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி, பாரா மெடிக்கல் படிப்புகள் , பி.பார்ம், 5 ஆண்டுகாலச் சட்டப்படிப்பு, பாரா மெடிக்கல் பட்டயப் படிப்புகள், புதுச்சேரி பிராந்தியத்திலுள்ள 6 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி சொசைட்டிகளில் வழங்கப்படும் இளங்கலை கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள் - ஏ.ஐ.ஏ.டி சுற்றின் கீழ் வழங்கப்படும் தொழிற்கல்விப் படிப்புகளுக்கு பொருந்தும் என சென்டாக் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: மாணவர்கள் www.centacpuducherry.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தங்களது லாகின் டாஷ்போர்டில் உள்ள கிரிவன்சஸ் பகுதி மூலமாகப் புகார்களைத் தெரிவிக்கலாம் அல்லது 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.