உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குழந்தையுடன் தாய் மாயம் கணவர் புகார்

 குழந்தையுடன் தாய் மாயம் கணவர் புகார்

புதுச்சேரி: குழந்தையுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; பேக்கரியில் வேலை செய்யும் இவர், புதுச்சேரி முத்திரப்பாளையம் மேட்டுத்தெருவில் தனது மனைவி சங்கீதா, 25, மற்றும் 3 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 16ம் தேதி, சங்கீதா தனது குழந்தையுடன் திடீரென மாயமானார். அதன் பிறகு தனது கணவரிடம் மொபைலில் தொடர்பு கொண்டு, எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் வாழ்க்கை நான் பார்த்து கொள்கிறேன் என, பேசி, அவர் தொடர்பை துண்டித்தார். இதுகுறித்து, மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை