உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அன்னை தெரசா பிறந்த நாள்

 அன்னை தெரசா பிறந்த நாள்

புதுச்சேரி: அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி செய்தி விளம்பர துறை சார்பில், பாரதி பூங்கா அருகில் உள்ள அன்னை தெரசா சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும், புனித அன்னை தெரசா நற்பணி மன்ற உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், தன்னார்வலர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ