உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தாய் கண்டிப்பு மாணவி தற்கொலை

 தாய் கண்டிப்பு மாணவி தற்கொலை

புதுச்சேரி: படிக்காமல் மொபைல் போன் பார்ப்பதை, தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார். ரெட்டியார்பாளையம், சத்தியா சாய் நகரை சேர்ந்தவர் தேவகுமார் மகள் சிவானி, 14. இவர், தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். பள்ளியில் தேர்வு நடந்து வரும் நிலையில், விடுமுறையில் வீட்டில் இருந்தார். அப்போது, படிக்காமல் மொபைல் போனில் விளையாடியதை அவரது தாய் கமலா கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 24ம் தேதி, வீட்டில் துாக்கு போட்டு கொண்டார். உடனடியாக அவரை மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை