உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோட்டார் பைக் திருடியவர் கைது

மோட்டார் பைக் திருடியவர் கைது

புதுச்சேரி: பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். பெரியகடை போலீசார் நேற்று முன்தினம் இரவு வெங்கடா நகர் 45 அடி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த நபரை நிறுத்தி, விசாரித்தனர். அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என, தெரியவந்தது. விசாரணையில் கடலுார், குள்ளஞ்சாவடியை சேர்ந்த ராமலிங்கம், 54; என்பதும், தற்போது புதுச்சேரி அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும், சமீபத்தில் காமராஜ் சாலை, கோவிந்த சாலை பகுதிகளில் இரண்டு பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.ராமலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு பைக்குளை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ