மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
11-Oct-2025
புதுச்சேரி: திரவுபதியம்மன் கோவில் மாட வீதிகளுக்கு ரூ.49 லட்சம் செலவில் புதைவட மின் கேபிள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை திரவுபதி யம்மன் கோவில் சுவாமி வீதியுலா உட்பட்ட மாட வீதிகளுக்கு தரைக்கு அடி யில் மின் இணைப்பு ரூ.49,92,588 செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதியை செல்வகணபதி எம்.பி,. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்தார். அதனையொட்டில இப்பணி துவக்க விழா நேற்று திரவுபதியம்மன் கோவில் எதிரில் நடந்தது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலையில் செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார். மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் கனியமுதன், ரமேஷ், செந்தில்குமார், செயற்பொறியாளர் கிருஷ்ணசா மி, உதவி பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர் ஹரிஹரன், என்.ஆர்.காங்., பிரமுகர் நந்தா தரன், காங்., பிரமுகர் நந்தா கலைவாணன் உள் ளி ட்டோர் உடனிருந்தனர்.
11-Oct-2025