உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைமை செயலரிடம் எம்.பி.,க்கள் புகார்; மேம்பாட்டு பணிகளில் தொய்வால் அதிருப்தி

தலைமை செயலரிடம் எம்.பி.,க்கள் புகார்; மேம்பாட்டு பணிகளில் தொய்வால் அதிருப்தி

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டிற்கு ரூ. 2 கோடி தரப்படுகிறது. இதன் மூலம் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் அடிப்படை பணிகளை செய்து வருகின்றனர். .இதேபோல் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி., களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டிற்கு ரூ.5 கோடி வழங்கப் படுகிறது. இவர்கள் இந்த நிதியை கொண்டு, தொகுதியில் முக்கிய பணிகளை செய்து கொடுக்கலாம். குறிப்பாக குடிநீர், பொது சுகாதாரம், கல்வி, சாலைகள் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்து கொடுக்க முடியும்.அதன்படி, புதுச்சேரியில்உள்ள இரு எம்.பி.,க்களும் பல கோடி நிதியை ஒதுக்கியும் கூட பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.கோப்பு தயாரிப்பு முதல் டெண்டர் வரை அனைத்து பணிகளும் ஜவ்வாக இழுக்கிறது. சில சமயம் ஓராண்டு கூட கடந்து விடுகிறது.உதாரணமாக ராஜ்ய சபா எம்.பி., செல்வகணபதி நான்கு ஆண்டுகளில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால் ரூ.5.55 கோடி அளவிற்கு தான் பணிகள் நடக்கிறது. இதேபோல் தான் வைத்திலிங்கம் எம்.பி.,க்கும்.இதன் காரணமாக அதிகாரிகள் மீது இரு எம்.பி.,க்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலரிடமும் தற்போது முறையிட்டுள்ளனர்.புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், எம்.பி.,க்கள் தரும் ரூ.5 கோடி நிதி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் கோப்பு தயாரிப்பு, டெண்டர் என அதிகாரிகள் வீணாக நாட்களை கடத்தி நிதியை செலவிடாமல் வீணடித்து வருகின்றனர். இவ்விஷயத்தில், தலைமை செயலர் நேரடியாக தலையிட வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.அதையடுத்து, எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை விரைவாக செலவிடுவது, அனுமதி தருவது, தேவையற்ற நடைமுறைகளை களைய தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து துறை செயலர்களுடன் வரும் 2ம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை