மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா: பரிசுகள் வழங்கல்
24-Feb-2026
புதுச்சேரி: முத்திரையர்பாளையம், முத்திரையர் மேல்நிலைப் பள்ளியின் 39வது ஆண்டு விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் முத்துராமன் தலைமை தாங்கினார். டிரஸ்டி உறுப்பினர்கள் அனந்தசயனம், சரஸ்வதி, தமிழரசி, கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் தீனன் மற்றும் தலைமை ஆசிரியர் விமல் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
24-Feb-2026