உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி : நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு, 2வது நாள் காத்திருப்பு போராட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசினார். புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, உள்ளாட்சித்துறை அலுவலகம் முன், 2வது நாளாக நேற்று காலை 9:00 மணியளவில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாங்கன்னிதாசன் தலைமை தாங்கினார். ஆலோசகர் ஆனந்த கணபதி, முருகையன், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினார். அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி, ஞானசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உள்ளாட்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு 7வது, ஊதியக்குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தினர்.இதில், ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்வீனர் கதிரேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை