நகராட்சி ஆணையர் மாகேவிற்கு மாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், மாகேவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ஸ்ரீஜித், கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில், மாகே மண்டல நிர்வாக அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலர் சரத் சவுகான் வெளியிட்டுள்ளார்.