மொத்த மீன் வியாபாரிகள் பதிவு செய்ய நகராட்சி உத்தரவு
புதுச்சேரி : நவீன சுகாதார மீன் அங்காடியில் மொத்த மீன் வியாபாரிகள் நகராட்சியில் பதிவு செய்ய உழவர்கரை நகராட்சி உத்தரவிட்டுள்ளது.நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட கொட்டுப்பாளையம், இ.சி.ஆர்.சாலையில் அமைந்துள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் மொத்த மீன் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், மொத்த மீன் வியாபாரம் செய்வதற்கு நகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை உழவர்கரை நகராட்சியில் உள்ள வருவாய் பிரிவை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://www.oulmun.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 15ம் தேதிக்குள் தங்களின் விபரங்களை மொத்த மீன் வியாபாரம் செய்ய பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் வரும் 16-.12.-2024-க்கு பிறகு நவீன சுகாதார மீன் அங்காடியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.