உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காளான் வளர்ப்பு செயல் விளக்கம்

காளான் வளர்ப்பு செயல் விளக்கம்

புதுச்சேரி: ஏம்பலம் கிராமத்தில் காளான் வளர்ப்பு படிநிலை குறித்து மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயிலும் இளைநிலை இறுதி ஆண்டு மாணவிகள் ஏம்பலம் கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, ஏம்பலம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் வேளாண் அலுவலர் தினகரன் தலைமையில் மாணவிகள் ஹரிணி, ஹேமா, மயாவதி, கனிதா, கவிதாஞ்சலி, காவியா, கீர்த்திகா, கோகிலா ஸ்ரீ, கீர்த்திகா, குமுதனி ஆகியோர் காளான் வளர்ப்பு படிநிலைகள், அதன் நன்மைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கினர்.விநாயகா அக்ரி கிளினிக் உரிமையாளர் காசிநாதன் காளான் வளர்ப்பிள் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராவ்கெலுஸ்கர், திட்ட அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் நடந்தது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி