பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் இசை மருத்துவ கருத்தரங்கம்
பாகூர்; பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழத்தின், ஸ்கூல் ஆப் மியூசிக் தெரபி, இன்ஸ்டிடியூட் ஆப் ஸலுடோஜெனெசிஸ் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின் சார்பில், இசை மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.பல்கலைக்கழக துணை வேந்தர் நிகர் ரஞ்ஜன் பிஸ்வாஸ் வழிகாட்டுதலின் படி நடந்த நிகழ்ச்சியை, மியூசிக் தெரபிஸ்ட் அண்ட் டியூட்டர் அனுஷா ஒருங்கிணைத்தார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களுக்கு, இசை மருத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ளும் வகையில் இரண்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல்கள் மற்றும் இசை மருத்துவ அமர்வுகளில் பங்கேற்று இசை மருத்துவ நடைமுறைகளை நேரடியாகக் கண்டு கற்றுக் கொண்டனர்.பயிற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் ஒரு நாள் யோக சிகிச்சை வகுப்பில் பங்கேற்று அதன் நடைமுறை அம்சங்களைப் பற்றிய அறிவைப் பெற்றனர்.நிறைவு நாளில் நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவில், பாரதியார் பல்கலைக்கூடம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஸலுடோஜெனெசிஸ் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின் மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.இந்நிகழ்சியில், பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் (பொ) டாக்டர் அன்னபூர்ணா, இன்ஸ்டிடியூட் ஆப் ஸலுடோஜெனெசிஸ் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின் இயக்குநர் ஆனந்த பாலயோகி பவனானி, நிர்வாக பொறுப்பாளர் சோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.