மாநில அளவிலான ஓவியப்போட்டி முத்தியால்பேட்டை மாணவர் முதலிடம்
புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த முத்தியால்பேட்டை பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில், அரசு துவக்கப்பள்ளி பிரிவில் முத்தியால்பேட்டை அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவன் பிரகதீஷ் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவனைப் பாராட்டும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பள்ளித் துணை வட்டம் -1 ஆய்வாளர் அனிதா கலந்துகொண்டு, மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில்ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, நிரஞ்சனா தேவி, ராஜம், ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.