மேலும் செய்திகள்
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
05-Jun-2025
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா இன்று நடக்கிறது.நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த 29ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அங்குரார்பணம், ரக் ஷயபந்தனம், முதல்கால பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை, மாலை மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 9.50 மணிக்கு முத்தமாரியம்மன் விமான கும்பாபிேஷகமும், 10.15 மணிக்கு மூலவர், பரிவாரங்களுக்கு கும்பாபிேஷகம் விழா நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாரதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
05-Jun-2025