உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாட்டை வளர்ச்சியை நோக்கி வழி நடத்தும்  பட்ஜெட் குறித்து நமச்சிவாயம் கருத்து

நாட்டை வளர்ச்சியை நோக்கி வழி நடத்தும்  பட்ஜெட் குறித்து நமச்சிவாயம் கருத்து

புதுச்சேரி: நாட்டை வளர்ச்சியை நோக்கி வழி நடத்தும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நாட்டு மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம்-2047 என்ற இலக்கை எட்டுவதற்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடனின் உச்சவரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.புற்றுநோய் இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கான உச்ச வரம்பு 12 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லுாரிகளின் இடங்கள் கூடுதலாக 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டை வழி நடத்தும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட பட்ஜெட்டினை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்ச் நிர்மலா சீதாராமன், வழிகாட்டுதலாக இருந்த பிரதமர் மோடிக்கு புதுச்சேரி மக்கள் சார்பில் பாராட்டுகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ