உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரங்கசாமி ஆட்சியில் தடைபட்டு கிடக்கும் திட்டங்கள் நாராயணசாமி குற்றச்சாட்டு

ரங்கசாமி ஆட்சியில் தடைபட்டு கிடக்கும் திட்டங்கள் நாராயணசாமி குற்றச்சாட்டு

ரங்கசாமி ஆட்சியில் திட்டங்கள் தடைப்பட்டு கிடக்கிறது. எந்த கட்டமைப்பும் உருவாகவில்லை என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தலித் அமைச்சர்கள் இல்லாத அமைச்சரவையை ரங்கசாமி நடத்துவது வெட்கக்கேடானது. இதைகண்டித்து போராட்டம் நடத்தினோம். இதற்கு ரங்கசாமி செவிசாய்க்கவில்லை. புதுவையை கொலை நகரமாக என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு மாற்றி வருகிறது. ஆட்சியாளர்களும், உள்துறை அமைச்சரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். புதுச்சேரி மக்கள் பயந்து வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. இரவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ., எம்.எல்.ஏ., சாய்சரவணக்குமார் என்கவுன்டர் செய்ய வலியுறுத்துகிறார். அமைச்சர் நமச்சிவாயம், என்கவுன்டர் செய்வது சுலபமல்ல என்கிறார். புதுச்சேரியில் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டியது அமைச்சரின் கடமை. ஆனால், பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டியது அமைச்சரின் கடமை. ஆனால் எம்.எல்.ஏ., சாய்சரவணக்குமாரை அமைச்சர் நமச்சிவாயம் ஏளனமாக பேசுகிறார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நமச்சிவாயம் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். இப்போது சாய்சரவணக்குமார் இதையே கூறியுள்ளார். அவரின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை பற்றி கவலைப்படாமல், சொந்த நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடந்தாலும், திட்டங்கள் தடைபட்டு கிடக்கிறது. பெண்கள் இலவச பஸ் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை என அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாத முதல்வராக ரங்கசாமி உள்ளார். அவர் மாநில அந்தஸ்து பெறவில்லை. மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை, கடன் மட்டுமே பெறுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை குறைத்துவிட்டனர். எனவே காங்கிரசை குறைகூறுவதை ரங்கசாமி நிறுத்தி கொள்ள வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி