உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நாதன் அறக்கட்டளை மகளிர் அணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

 நாதன் அறக்கட்டளை மகளிர் அணி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை மகளிர் அணி சார்பில் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மகளிர் அணி தலைவி வள்ளி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் பங்கேற்று, ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும், எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும். தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள நாதன் அறக்கட்டளை மகளிர் குழுக்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி