உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி தேர்வு

 தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி தேர்வு

புதுச்சேரி: தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொதுச் செயலாளராக மோகன் தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தேர்தல், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் நடந்தது. அனைத்து மாநில பிரதிநிதிகள் 73 பேர் பங்கேற்றனர். இதில், அகில இந்திய தலைவராக டில்லியை சேர்ந்த மிஸ்ரா தேசிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். கேரள மாநில கோபிநாத் பொதுச் செயலாளராகவும், புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்க தலைவர் மோகன் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் முதல் முறையாக புதுச்சேரியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !