உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் தேசிய ேஹக்கதான் நிகழ்ச்சி

மணக்குள விநாயகர் கல்லுாரியில் தேசிய ேஹக்கதான் நிகழ்ச்சி

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான ேஹக்கதான் நிகழ்ச்சி நடந்தது. நாடு முழுதும் இருந்து பல்வேறு கல்லுாரி, பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருதினராக ஹார்வர்ட் பல்கலைக் கழக தலைமை தரவு விஞ்ஞானி ஜோதி பெரியசாமி கலந்து கொண்டார். தட்ச ஷீலா பல்கலைக்கழக துணை வேந்தர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி, தேர்வு கட்டுப்பாளர் ஜெயக்குமார், கல்லுாரி டீன் அறிவழகர், வேலைவாய்ப்பு துறை டீன் கைலாசம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவு ேஹக்கதான் சிறப்பு லோகோ மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். ஐ.டி., துறை தலைவர் ராஜூ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ