உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய ஓய்வூதியர் சங்கங்கள் தர்ணா 

தேசிய ஓய்வூதியர் சங்கங்கள் தர்ணா 

புதுச்சேரி: தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய தர்ணா போராட்டம் நடந்தது.தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், 8,வது ஊதியக்குழுவை அமைத்தல், ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணச்சலுகைகளை மீண்டும் வழங்குதல், ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஒதியஞ்சாலை, அண்ணா சிலை அருகில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.இந்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சண்முகம், கலியமூர்த்தி, சண்முக சுந்தரம், விஸ்வநாதன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை