மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இன்ஸ்ட்ருமென்டேஷன் கன்ட்ரோல் இன்ஜினியரிங் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் இணைந்து, டெல்லி அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையுடன்,மருத்துவ கருவியியலில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. பயோமெடிக்கல் பொறியியல் துறை தலைவி விஜயலட்சுமி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயக்குமார், டீன்கள் அகடமிக்ஸ் அன்புமலர், அறிவழகர், பணி நியமன டீன் கைலாசம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முதன்மை விருந்தினர்களாக புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் நேச்சுரல் கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் துணை தலைவர் மகேந்திரன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் முனைவர் ஹேமகுமார் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டு, மருத்துவ சாதனங்களின் புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்டறிதல், ரோபோடிக் அறுவைச் சிகிச்சை அமைப்புகள், எதிர்கால ஆராய்ச்சி வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் கருத்துக்களை கூறினர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் நவீன்குமார், லோகசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர். இன்ஸ்ட்ரூமென்டேஷன் கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறை தலைவர் அருணகிரி நன்றி கூறினார்.