புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அணுசக்தி தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக பசுமை எரிசக்தி தொழில்நுட்ப துறை, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், யுனெஸ்கோ இருக்கை சார்பில், நிலையான சூழலுக்கான அணுசக்தியில் முன்னேற்றங்கள் எனும் தலையில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. பல்கலைக்கழக கலாசார மற்றும் பண்பாட்டு மையத்தில் நடந்த கருத்தரங்கினை துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். பேராசிரியர் ஜாபர் அலி நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, கார்பன் குறைப்பு, நீர் மின், சூரிய, காற்றாலை, அணுசக்தி ஒருங்கிணைப்பு குறித்து பேசினார். தொடர்ந்து நடந்த சிறப்ப அமர்வுகளில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கலந்துரையாடினர். யுனெஸ்கோ இருக்கை தலைவர் அருண் பிரசாத், வரும் 2047ம் ஆண்டிற்கும் 100 ஜிகாவாட் அணுசக்தி திறன் திட்டம், பூஜ்ய உமிழ்வுக்கான இலக்குகள் குறித்து பேசினர். கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.