உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய விளையாட்டு நாள் பரிசளிப்பு விழா

தேசிய விளையாட்டு நாள் பரிசளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இயக்ககம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய தேசிய விளையாட்டு நாள் மற்றும் கேலோ புதுச்சேரி திருநாள் பரிசளிப்பு விழா, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி கல்வித்துறையின் சார்பில் நடந்த போட்டிகளில், முதல் வட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றனர். முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை நிரஞ்சனாதேவி செஸ் போட்டியில் முதல் பரிசு பெற்றார். புதுச்சேரி கல்வித்துறை முதல் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி, தனது வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ