உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இயற்கை பாரம்பரிய உணவுத் திருவிழா

 இயற்கை பாரம்பரிய உணவுத் திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது. பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். தலைமை விருந்தினராகஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உமா பார்வதி , சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி தேவிகா, அசோசியேட் மேனேஜர் சித்ரா பரத் ஆகியோர் கலந்து கொண்டு உணவு திருவிழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மழலை மாணவர்கள் இயற்கை பாரம்பரிய முறையில் செய்த உணவுகளை காட்சிப்படுத்தி, அதன் பயன்களையும் விளக்கினர். ஏற்பாடுகளை மழலையர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட்சுமி, சுஜாதா, நித்தியா மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை