உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா

பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா

புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி- திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அம்பாளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நேற்று மாலை நவராத்திரி விழாவில் கொலுவுக்கு தீபாரதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கணேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை