மேலும் செய்திகள்
நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்
20-Sep-2025
புதுச்சேரி : புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜையில், இன்று ஸ்ரீவித்யா மூல மந்திர ேஹாமம் நடக்கிறது. புதுச்சேரி, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உலக நன்மை வேண்டி, 5ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா காந்தி வீதியி்ல கடந்த 21ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான நேற்று மாலை தாரா தேவி மூல மந்திர ேஹாமம் நடந்தது. தொடர்ந்து பாராயணம், வாய்ப்பாட்டு மற்றும் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வானொலி நிலைய இணை இயக்குநர் சுதர்சனம் மற்றும் இந்து முன்னணி பாலகவுதமன் ஆகியோர் கலந்து கொண் டனர்.நான்காம் நாளான இன்று மாலை ஸ்ரீவித்யா மூல மந்திர ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து நாமசங்கீர்த்தனம், பரதநாட்டியம் நடக்கிறது.
20-Sep-2025