உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 5ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா மற்றும் துர்கா பூஜை நாளை 21ம் தேதி துவங்குகிறது. நவராத்திரியையொட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், உலக நன்மை வேண்டி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் அருகில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி சிலைகள் பிரதிஷ்டை செய்து நாளை 21ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த சிறப்பு பூஜை நாளை 21ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 2ம் தேதி வரை தினசரி மாலையில் சிறப்பு ேஹாமங்கள் நடக்கிறது. அதில் 22ம் தேதி தக் ஷிண காளி மூல மந்திர ேஹாமம் , 23ம் தேதி தாரா தேவி மூல மந்திர ேஹாமம், 24ம் தேதி ஸ்ரீவித்யா மூல மந்திர ேஹாமம், 25ம் தேதி புவனேஸ்வரி மூல மந்திர ேஹாமம், 26ம் தேதி திரிபுர பைரவி மூல மந்திர ேஹாமம், 27ம் தேதி சின்ன மஸ்தா மூல மந்திர ேஹாமம், 28ம் தேதி துாமாதேவி மூல மந்திர ேஹாமம், 29ம் தேதி பாகாளமுகி மூல மந்திர ேஹாமம், 30ம் தேதி ராஜ மாதாங்கி மூல மந்திர ேஹாமம், 1ம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, 2ம் தேதி விஜயதசமியையொட்டி ஸ்ரீகமலாத்மிகா மூல மந்திர ேஹாமம், மகா பூர்ணாஹூதி, அம்பு போடுதல், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் துர்கா சிலை ஊர்வலம் மற்றும் விஜர்சன நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஹிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த நவராத்திரி சிறப்பு பூஜையை யொட்டி தினசரி பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை