மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல் இளைஞர்கள் சீரமைப்பு
13-Oct-2024
புதுச்சேரி: மக்கள் போக்குவரத்து நெரிசலால் அல்லாடி கொண்டு இருக்கும்போது ேஹப்பி ஸ்ட்ரீட் புதுச்சேரிக்கு தேவையா என மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் அவதியுற்று வரும் நிலையில், அரசு 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியை நடத்தி கலாசார சீரழிவை ரசித்துக் கொண்டுள்ளது. இது அரசுக்கு தேவையா... எந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாத அரசை நாம் பெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது. மூன்று ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை ஆட்சியாளர்கள் அறிவார்கள். இந்த நெரிசலுக்கு நேரடியாக அரசு பொறுப்பில்லை என்றாலும் அதனை வளர விடாமல் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டது. இதனை தவிர்ப்பதற்கு அரசு நீண்டகால திட்டங்களை தீட்ட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
13-Oct-2024