உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் மாதிரி தேர்வு மாணவர்களின் அச்சத்தை போக்கும்: கார்த்திகேயன்

நீட் மாதிரி தேர்வு மாணவர்களின் அச்சத்தை போக்கும்: கார்த்திகேயன்

புதுச்சேரி: 'நீட்' தொடர்பான மாணவர்களின் பயத்தை போக்குவதற்கும், நீட் தேர்வை எப்படி எழுத வேண்டும் என்பதற்காக முன் மாதிரியாகவும் தேர்வு அமைந்துள்ளது என ஸ்பெக்ட்ரா நிறுவன மேலாண் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தினமலர் நாளிதழும், ஸ்பெக்டரா நிறுவனம் மூலம் நீட் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். தேசிய தேர்வு முகமை எப்படி நீட் தேர்வை நடத்துகிறதோ அதே மாதிரி தான் தற்போது நடத்தப்படுகிறது. நீட் தொடர்பான மாணவர்களின் பயத்தை போக்குவதற்கும், நீட் தேர்வை எப்படி எழுத வேண்டும் என்பதற்காக முன் மாதிரியாக இத்தேர்வு அமைந்துள்ளது.இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது எழுதப்பட்டுள்ள தேர்வுத்தாள் தேசிய தேர்வு முகமை தேர்வின் நிலையான வினாத்தாள் ஆகும். இதனை எதிர்கொள்ளும் மாணவர்கள், தற்போதைய தேர்வு எழுதும் நிலையை அறிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி நீட் தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி