உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் அல்லாத மருத்துவ படிப்பு விருப்ப பாடங்களை சமர்பிக்கலாம்

நீட் அல்லாத மருத்துவ படிப்பு விருப்ப பாடங்களை சமர்பிக்கலாம்

புதுச்சேரி: நீட் அல்லாத இளநிலை படிப்புகளின் இரண்டாம் சுற்று கலந்தாய்வு விருப்ப பாடங்களை இன்று சமர்பிக்க அறுவுறுதப்பட்டுள்ளது. புதுச்சேரி சென்டாக் மூலம் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இப்படிப்புகளுக்கு மொத்தமுள்ள 10 ஆயிரத்து, 810 இடங்களுக்கு 12 ஆயிரத்து 290 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 14ம் தேதி வெளியான முதல் சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியலில், 7 ஆயிரத்து, 590 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சீட் பெற்றவர்கள் கடந்த 19ம் தேதிக்குள் அந்தந்த கல்லுாரிகளில், சேர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில், கல்லுாரிகளில் 3 ஆயிரத்து 919 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 3 ஆயிரத்து 671 பேர் மாணவர்கள் சேரவில்லை. இரண்டாவது சுற்றுக்கு விருப்ப பாடங்களை இன்று காலை 10 மணிக்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை