/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாலக தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
நுாலக தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி : சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:நுாலகம் மற்றும் தகவல் உதவியாளர் பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த 2015ம் ஆண்டு அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை வாயிலாக அறிவிப்பு வெளியானது. 10 ஆண்டுகளாகியும், இதுவரை இப்பதவிகள் நிரப்பப்படவில்லை. தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலி பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும் என, கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை.எனவே காலியாக உள்ள நுாலகம் மற்றும் தகவல் உதவியாளர் பதவிகளை உடன் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.