அவ்வை நகர் மகளிர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
புதுச்சேரி : அவ்வை நகர் மகளிர் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. அவ்வை நகர் மகளிர் சங்க போஷகர் லட்சுமி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் உமா சேகர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பங்காரம்மாள் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் தீபாசுந்தர் நிதி அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தீபா சுந்தர் தலைவியாகவும், பார்வதி தேவ நாராயணன் துணை தலைவியாகவும், அனுராதா கண்ணன் செயலாளராகவும், லலிதா செல்வராஜ் துணை செயலாளராகவும், தமிழரசி பொருளாளராகவும், சார்லட் , பிரேமலதா, உமா பார்வதி, சாரதாம்பாள், சாந்தி பிரபாகர், சிந்து, பங்காரம்மாள், தமிழ்ச்செல்வி, ஸ்ரீவித்யா, பச்சையம்மாள், சாரதா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.செயலாளர் அனுராதா கண்ணன் நன்றி கூறினார்.