சாரதாம்பாள் கோவிலில் புதிய பஞ்சாங்கம் பூஜை
புதுச்சேரி: சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டு (பராபவ ஆண்டை) முன்னிட்டு வாக்கிய பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் பராபவ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கணபதி பூஜையுடன் வாக்கிய பஞ்சாங்கம் வாசிப்பு நேற்று நடந்தது. கீதாராம குருக்கள், புதிய பஞ்சாங்கத்தை வாசித்து, பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பஞ்சாங்கத்தை வழங்கினார். திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாரதாம்பாள் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.