ஓய்வு பெறும் நேரத்தில் போலீஸ் எஸ்.பி.,க்கு புதுசிக்கல்
புதுச்சேரி அரசு சாராய வடி ஆலை நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆலையில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முன் வந்தது. அதற்காக, தற்காலிக ஊழியர்களில் யார் மீதேனும் குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என அப்போதைய உளவுத்துறை எஸ்.பி.,யிடம் தடையில்லா சான்று கோரியது.அதன்பேரில் அந்த செல்லமான உளவுப்பிரிவு எஸ்.பி.,யும் எவர் மீதும் வழக்கு இல்லை என தடையில்லா சான்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரமும் செய்யப்பட்டு விட்டனர். அந்த உளவுப்பிரிவு எஸ்.பி.,யும், சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாறுதாலகிவிட்டார்.இந்நிலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களில் 36 பேர் மீது, கடந்த 2021ம் ஆண்டு வில்லியனுார் போலீசார் சட்ட விரோதமாக கூடி, அரசு ஊழியரை சிறை பிடித்த, அவரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு உள்ள விவகாரத்தை, அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஆதாரத்துடன், கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளார்.அந்த மனு குறித்து விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தடையில்லா சான்று கொடுத்த செல்லமான எஸ்.பி., ஓய்வு பெறும் வேளையில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.