புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
புதுச்சேரி: கோரிமேடு இஸ்ரவேல் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மாற்றியை எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி, கோரிமேடு இஸ்ரவேல் நகர் பகுதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு கொறடா ஆறுமுகம் இயக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் பாண்டியன், இளநிலை பொறியாளர் சிவராஜ், மற்றும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உடனிருந்தனர்.