/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்; ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை
புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்; ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுபான கடை உரிமையாளர் கள், ரெஸ்டோ பார் உரிமையாளர்கள், ஓட்டல்கள் உரிமையாளர்களுடன் போலீஸ் ஆலோசனை கூட்டம் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், பக்தவாச்சலம், வம்சிதரெட்டி, இஷாசிங், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அரசின் விதிமுறைகளை பின்பற்றுங்கள். தங்கள் ஓட்டலுக்கு வரும் முதியோர், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். விபத்துக்கள் ஏதும் இன்றி பாதுகாப்பான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள் என, அறிவுரை வழங்கப்பட்டது.