புதுமாப்பிள்ளை பைக் திருட்டு
நெட்டப்பாக்கம்: புதுமாப்பிள்ளை பைக்கை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெட்டப்பாக்கம், தட்டாங்குளம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் விஜய்கிருஷ்ணன், 26. இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இவரது பைக்கை (பி.ஒய்.01.வி.எப்.5853) கடந்த 22ம் தேதி இரவு வீட்டு எதிரில் நிறுத்திவிட்டு துாங்க சென்றார். மறுநாள் அதிகாலை பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.