உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.எம்.கே., வேட்பாளர் நேரு உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை

என்.எம்.கே., வேட்பாளர் நேரு உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி நேயம் மக்கள் கழக வேட்பாளர் நேரு (எ) குப்புசாமி, குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன், நேற்று குளத்துமேடு வார்டு, நீடராஜபையர்வீதி, தம்புநாயக்கர் வீதி, லுாயி பிரகாசம் வீதி, சின்ன சுப்ராயபிள்ளை வீதி, பாரதி வீதி உள்ளிட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது ''நீடராஜபையர் வீதி, தம்பு நாயக்கர் வீதி, லூயிபிரகாசம் வீதி உள்ளிட்ட பகுதியில், புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை போக்கிட, மின்மாற்றி அமைக்கப்பட்டு, புதிய புதைவிட மின் கேபிள்கள் மூலமாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்திட, குக்கர் சின்னத்தில் ஓட்டு அளித்து என்னை வெற்றி பெற செய்திட வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஓட்டு சேகரிப்பின்போது, த.வெ.க., நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ