உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஏனாம் எம்.எல்.ஏ., பளீச்

நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஏனாம் எம்.எல்.ஏ., பளீச்

புதுச்சேரி; புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான நேரு, அங்காளன், சிவசங்கர் ஆகியோர் சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, சட்டசபை செயலரிடம் அடுத்தடுத்து மனு கொடுத்தனர்.அடுத்து, ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து மனு கொடுக்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்த கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது, அது போன்று எண்ணம் ஏதும் தற்போதைக்கு இல்லை. கட்சி மேலிடம் எந்த அறிவுறுத்தலையும் இன்னும் தரவில்லை. கட்சி மேலிடத்தின்படி தான் நான் செயல்பட முடியும். பா.ஜ., எம்.எல்.ஏக்கள் கொடுத்தால் நானும் கொடுப்பேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !