உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில் நடந்த பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தனியார் பஸ், ஆட்டோ, டெம்போ உள்ளிட்டவை இயங்கவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.மாநிலம் முழுதும், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அனைத்து அரசு ஊழியர்களும் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன், புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயங்கப்பட்டன. புது பஸ் நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, இ.கம்யூ., மாநில செயலர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச்செயலர் சேதுசெல்வம் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதேபோல், அனைத்து தொழிற்சங்கங்கள், 'இண்டி' கூட்டணி கட்சிகள் சார்பில், மாநிலம் முழுதும் 10 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில், 2,500 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !