உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடமாநில வாலிபர் மர்மசாவு

வடமாநில வாலிபர் மர்மசாவு

புதுச்சேரி: வட மாநில தொழிலாளரி மர்மமான முறை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஒடிசா மாநிலம், ஜெகதிகபுரத்தைச் சேர்ந்தவர் அர்தோஷ் பத்ரா, 30. இவர், புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பாட்டில் கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று நேற்று முன்தினம் இரவு அவரது அறையில், மயங்கி கிடந்தார். உடனே அவருடன் தங்கி இருந்த அதே ஊரைச் சேர்ந்த கவுதம், அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ