உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி முதல்வருக்கு என்.ஆர்.காங்., பதில்

மாஜி முதல்வருக்கு என்.ஆர்.காங்., பதில்

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு, என்.ஆர்.காங்., பதில் அளித்துள்ளது.என்.ஆர்.காங்., செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் அறிக்கை;முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி இதுவரை 50 முறை கூறியுள்ளார். இவரின் 5 ஆண்டு கால காங்., ஆட்சியில், 5 கி.மீ., சாலையை கூட போடாதவர். 50 பேருக்கு கூட அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவில்லை.ரேஷன் கடை திறந்து இலவச அரிசி திட்டத்தை மீட்டெடுக்க முடியாமல், ஒரு அரசு நடக்கிறது என்பதற்கான எந்தவித அசைவும் இன்றி 5 ஆண்டுகள் முதல்வராக இருந்து விட்டு சென்றார். ஆனால், என்.ஆர்.காங்., ஆட்சியில் ரூ. 600 கோடி மதிப்பில் சாலைகள் புனரமைப்பு, 4,000க்கும் மேற்பட்டோருக்கு நேர்மையான முறையில் அரசு பணி, முதியோர், விதவை, ஊனமுற்றோர், மீனவர், கட்டட தொழிலாளர் உதவித்தொகை உயர்வு, ரேஷன் கடை திறந்து, இலவச அரிசி வழங்கல், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், ரொட்டிபால் திட்டங்களை மீட்டெடுத்தவர் முதல்வர் ரங்கசாமி.அவர், ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதை மக்கள் முடிவுக்கு விடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை