உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்., காங்., பிரமுகர் பிறந்த நாள் விழா

என்.ஆர்., காங்., பிரமுகர் பிறந்த நாள் விழா

அரியாங்குப்பம்: புதுச்சேரி என்.ஆர்., காங்., பிரமுகர் வடிவேல் பிறந்த நாள் விழா, அவரது இல்லத்தில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.அகில இந்திய என்.ஆர்., காங்., பிரமுகர் வடிவேல், தனது 71வது பிறந்த நாள் விழாவை அவரது இல்லத்தில், என்.ஆர்., காங்., மணவெளி தொகுதி தலைவர் குமரவேல் என்கிற குமரேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து, அவருக்கு, பூங்கொத்து கொடுத்து குமரவேல் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., மணவெளி தொகுதி நிர்வாகிகள், புருேஷாத்தமன், கன்னியப்பன், மாசிலாமணி, திருமால், குமரன், அன்பழகன், வரததேசிகன், குமாரசெல்வம் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ