உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்.,- பா.ஜ., இரட்டை இன்ஜின் ஆட்சியால் புதுச்சேரிக்கு பயனில்லை

என்.ஆர்.காங்.,- பா.ஜ., இரட்டை இன்ஜின் ஆட்சியால் புதுச்சேரிக்கு பயனில்லை

எதிர்க்கட்சி தலைவர் சிவா தாக்குபுதுச்சேரி: புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த, எதிர்கட்சி தலைவர் சிவா, கூறியதாவது: புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது, மாநில கடன் தள்ளுபடி செய்தல்,மாநிலத்திற்கு கூடுதல் நிதி பெறவும், முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்திக்காமல் இருப்பது ஏன். திட்ட குழு கூடி, புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை வழங்காமல், மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.பெஞ்சல் புயல் பாதிப்புகளைமத்திய குழு நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தும், புதுச்சேரி அரசு கோரிய ரூ. 760 கோடி நிதியை, மத்திய அரசு வழங்காமல் வஞ்சிக்கிறது.புயலால் சேதம் அடைந்த தடுப்பணைகள், பாலங்கள், சாலைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை.விவசாய பயிர் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.சிறு விவசாயி, அனைவருக்கும் விவசாய கடன் தள்ளுபடி என, அறிவித்து விட்டு, ஒரு தரப்பினருக்கு மட்டும் தள்ளுபடி செய்து வஞ்சித்துள்ளனர்.புதிய தொழில் கொள்கை மூலம்தொழிற்சாலைகள் கொண்டு வருவது,பஞ்சாலைகள் ஒருங்கிணைத்து வேலை வாய்ப்பு அளிப்போம்.ஜவுளி பூங்கா, ஐ.டி., பார்க் அமைப்போம் என, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கூறியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கவில்லை.விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், புதிய ரயில் வழித்தடங்கள் என எந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை.புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் ஆட்சி என கூறியும்,மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கான எந்த வளர்ச்சி திட்டமும் அறிவிக்கவில்லை.மேம்பாலங்கள், ரயில் திட்டங்கள், சுற்றுலா வளர்ச்சி என அறிவிப்பு செய்த எதையும் செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. இப்படி, புதுச்சேரி மக்களை ஏமாற்றும் இரட்டை இன்ஜின் பூட்டிய என்.ஆர்.காங்., பா.ஜ., அரசுகளின் கூட்டு சதியை கண்டித்து, தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.மக்கள் விரும்பாத ரெஸ்டோ பார்கள், புதிய மதுபான ஆலைக்கு அனுமதி கொடுத்துள்ளதை தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பட்டில் இருந்துவிட்டு, சபாநாயகருக்கு எதிராக,சுயலாபத்திற்காக தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சிக்கு, தி.மு.க., துணை நிற்காது என்றார். தி.மு.க.., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !