எண்ணறிவு போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி: வில்லியனுார் அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியில், கல்வித்துறை வட்டம்-5, மாணவர்களுக்கான அடிப்படை வாசிப்பு மற்றும் எண்ணறிவு போட்டிகள் நடந்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில், ஆசிரியர் லுார்து சேவியர் வரவேற்றார். வட்டம் துணை ஆய்வாளர் புவியரசன் வாழ்த்தி பேசினார். விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் ரவி சிறப்புரையாற்றினார். விழாவில், கல்வித்துறை சார்பில், நடத்தப்பட்ட மாணவர்களுக்கான அடிப்படை வாசிப்பு மற்றும் எண்ணறிவு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், ஆசிரியர்கள் கருணாகரன், வினோத் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.